டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-13 19:37 GMT
நெல்லை:
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர்் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜனதாவினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகராஜன் தலைமையில், அக்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல் என்.ஜி.ஒ. காலனியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று பல்வேறு இடங்களிலும் பா.ஜனதா கட்சியினர் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி, டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இட்டமொழி

கொரானா ஊரட‌ங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து, இட்டமொழியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்