வேதாரண்யம் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா? கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு

வேதாரண்யம் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்ததால்கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-14 11:11 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் வழியாக 3 தீவிரவாதிகள் நவீன ஆயுதங்களுடன் ஊடுருவ உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, கடலோர காவல் குழுமம் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கோடியக்கரை முதல் நாலுவேதபதி வரை உள்ள கடற்கரை பகுதிகளுக்கு நேற்று முன்தினம் இரவு விரைந்து சென்றனர்.

பின்னர் கடற்கரையோரங்களில் துப்பாக்கியுடன் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் வழியாக யாரும் ஊடுருவவில்லை. இருந்த போதிலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். வேதாரண்யத்தில் கடல் மார்க்கமாக பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கடற்கரையோரங்களில் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்