திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள்

திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2021-06-16 21:07 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி வழிகாட்டுதலின் பேரில், மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நீதிபதிகளும், வக்கீல் ஒருவரும் இணைந்து கொரோனா ஊரடங்கினால் பாதித்த எளம்பலூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனை தொடர்ந்து எளம்பலூரில் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா தலைமை தாங்கி 38 திருநங்கைகளுக்கு தலா 10 கிலோ அரிசியும் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்கினார். முன்னதாக அவர் திருநங்கைகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் எளம்பலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்