குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு

குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-17 18:46 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம், கிழக்கு தவிட்டுபாளையம், புகளூர், காகித ஆலை குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் பூந்தொட்டிகள், சாலையோரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கிடக்கும் உடைந்த தொட்டிகள், சிரட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் கொசுப்புழு அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கொசு ஒழிப்பு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனால் அந்த பகுதியை சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்