கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது-கஞ்சா விற்ற 13 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 194 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-19 05:15 GMT
மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவள்ளூர் மவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நத்தம் ஏரிக்கரை, மாதர்பாக்கம் ஏரிக்கரை, மாநெல்லூர் ஏரிக்கரை, தச்சூர் கூட்டுசாலை, பூதூர் கூட்டுச்சாலை, எளாவூர் சோதனைச்சாவடி உள்பட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக சித்தராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 38), நெல்வாய்கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (39), மாதர்பாக்கத்தை சேர்ந்த ஜேம்ஸ் (62), கவரைப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (30), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஹேமபூஷனம் (32), மாநெல்லூரைச்சேர்ந்த ரவிச்சந்திரன் (58), பெரியவண்ணாங்குப்பத்தை சேர்ந்த கமலஹாசன் (34), தேவனேரியைச்சேர்ந்த கன்னியப்பன் (53), குமணச்சேரியை சேர்ந்த வீரமணி (42) மற்றும் காவங்கரையை சேர்ந்த கமல் (31) ஆகிய 10 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 10 பேரையும் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 194 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பிடிபட்டது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரையொட்டிய ஆலமர சந்திப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தை சேர்ந்த சதிஷ் (35), நங்கபள்ளம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (25), வெட்டு காலனியைச்சேர்ந்த சுதாகர் (21) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்