கரூரில், ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள்

கரூரில், ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டது.

Update: 2021-06-23 18:56 GMT
கரூர்
கரூர் பஸ் நிலையம் எதிரே உள்ள வடக்கு மற்றும் தெற்கு முருகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் நடத்தி வரும் எலக்ட்ரீக் மற்றும் மொபைல் விற்பனை செய்யப்படும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை ஊரடங்கை மீறி திறந்து வியாபாரம் நடந்துள்ளது. மேலும் அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடியதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கடைகளை திறந்து வியாபாரம் செய்த ஒரு சில கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதையடுத்து அங்கு திறந்து இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்