அன்னாசி பழங்களின் வரத்து அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னாசி பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-06-23 19:32 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னாசி பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. 
எதிர்ப்பு சக்தி 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த  பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில உடலில் அதிக அளவு எதிர்ப்பு சக்தி பெற பல்வேறு வகையான பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த பழங்களில் அன்னாசி முக்கிய இடத்ைத பிடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தற்போது அன்னாசி பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். 
வரத்து அதிகரிப்பு 
இதுகுறித்து வியாபாரி கோவிந்தன் கூறியதாவது:- 
 அன்னாசி பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் மற்ற பழங்களை விட இந்த பழத்தை அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
கேரளா, மூணாறு, இடுக்கி, வத்தலக்குண்டு, கொல்லம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது அன்னாசி பழங்கள் விற்பனைக்காக இங்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது. 
சிறு வியாபாரிகள் 
தற்போது பழம் கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
பழத்தின் தரத்தை பொறுத்து விலை வித்தியாசப்படும். மற்ற நாட்களை விட தற்போது கொரோனா காலக்கட்டத்தில் இந்த பழங்களின் வருகையும், விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல எண்ணற்ற சிறு, சிறு வியாபாரிகளும் இங்கு வந்து பழங்களை வாங்கி செல்கின்றனர். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்