திருச்சியில் ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு

ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2021-06-28 20:27 GMT
திருச்சி
திருச்சி
ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவால் திருச்சி உள்பட 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வகை 2-ல் உள்ள திருச்சி உள்பட 23 மாவட்டங்களில் நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை குளிர்சாதன வசதி இன்றி திறந்து வியாபாரம் செய்யவும் அனுமதித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து திருச்சி என்.எஸ்.பி.சாலை, பெரியகடை வீதி, மெயின்கார்டு கேட், சத்திரம் பஸ் நிலையம், சின்னக்கடை வீதி பகுதிகளில் உள்ள பிரபல நகைக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
களை கட்டியது
முதல் நாளான நேற்று இந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை என்றாலும் ஜவுளி, நகைக்கடைகள் திறப்பால் திருச்சி கடைவீதியில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடைவீதி களை கட்டியது. இதேபோல, மணப்பாறை, காட்டுப்புத்தூர், லால்குடி, கல்லக்குடி, புள்ளம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் திறக்கப்பட்டன.
அரசு அலுவலகங்கள்- வங்கிகள்
அரசு அறிவிப்பின்படி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், ஏற்றுமதி நிறுவனம் தவிர அனைத்து தொழில் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. தனியார் நிறுவனங்கள் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் 50 சதவீத நபர்களுடன் இயங்கின.

மேலும் செய்திகள்