நகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

நகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2021-06-29 17:50 GMT
புதுக்கோட்டை, ஜூன்.30-
புதுக்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும், முன்களப்பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் விடுதலை குமரன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடந்த ஏப்ரல், மே மாதம் உள்பட 3 மாத சம்பளம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், முன் களப்பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்