கோவையில் 550 அரசு பஸ்கள் இயக்கம்

கோவையில் 550 அரசு பஸ்கள் இயக்கம்

Update: 2021-07-03 14:14 GMT
கோவை

பொதுபோக்குவரத்துக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 550 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்துக்கு தடை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் கடந்த மே மாதம் 10 -ந் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

முன்பதிவு அடிப்படையில் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லாததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டும் முதலில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடர்ந்து பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து மாவட்டங் களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 550 அரசு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன. 

இதையொட்டி கோவை உப்பிலிபாளையம் உள்பட அரசு போக்குவரத்துக் கழக டெப்போக்களில் நின்ற அரசு பஸ்களில் ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். 

அரசு பஸ்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இயக்குவதற்கு தயாராக பிரேக், டயர் மற்றும் பாகங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்து கோளா றுகளை சரி செய்தனர்.

தயார் நிலை

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 1,050 பஸ்கள் உள்ளன. அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 5 -ந் தேதி (நாளை) முதல் மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதில் முதற்கட்டமாக டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் என மொத்தமாக 550 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 

இதற்காக அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. 50 நாட்களாக பஸ்கள் ஒரே இடத் தில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பழுது பார்த்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

உடல்வெப்ப நிலை பரிசோதனை

பஸ்களின் இருக்கைகள், கைப்பிடி, படிக்கட்டு என அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. பஸ்சில் ஏறும் முன் பயணிக ளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்ப டுவார்கள். 
கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, நாமக்கல் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரைவு பஸ்கள் இயக்கப்படும். கேரளா உள்பட பிற மாநிலங்களுக்கு இயக்கப்படாது. 

தமிழக -கேரள எல்லையான வாளையாறு வரை அரசு பஸ்கள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். 

ஊழியர்களுக்கு தடுப்பூசி

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதேபோல் காந்திபுரம் விரைவு பஸ் நிலையத்தில் இருந்து சென் னை, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை உள்ளிட்ட இடங்க ளுக்கு சொகுசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில், 50 சதவீத பயணி களுடன் இயக்கப்படும்.

 கோவையில் இருந்து கர்நாடகா மாநில எல்லையான ஒசூர் வரை சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

 இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்