கொடைக்கானலில் ஹெலிபேடு தளம் அமையும் இடத்தில் கலெக்டர் ஆய்வு

கொடைக்கானலில் ஹெலிபேடு தளம் அமையும் இடத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-03 18:57 GMT
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்காகவும்,  பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் ஹெலிகாப்டர் சேவை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஹெலிபேடு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடம் தேர்வு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 
இதில் இறுதியாக நகரின் அருகே சின்னபள்ளம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அந்த இடத்தை மாவட்ட கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆய்வின்போது, ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தாசில்தார் சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் ரவி, வில்பட்டி ஊராட்சி தலைவர் வாசு,  ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு அட்டுவம்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள பகுதியையும், வில்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சமுதாய கிணறு, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டும் பணியையும் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்