இந்த ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.5,405 கோடி கடன் வழங்க திட்டம்

இந்த ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.5,405 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது

Update: 2021-07-03 20:31 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார்.அதை தொடர்ந்து கலெக்டர் சந்திரகலா பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு ரூ.5 ஆயிரத்து 405 கோடியே 49 லட்சத்தை வங்கிகள் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.4 ஆயிரத்து 815 கோடியே 30 லட்சத்தை விட 9.28 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கலெக்டர் சந்திரகலா வெளியிட்ட கடன் திட்ட அறிக்கையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், ஐ.ஓ.பி.ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்