திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-04 12:08 GMT
திருவண்ணாமலை

சாலை மறியல்

திருவண்ணாமலை பே கோபுரம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை பே கோபுரம் அருகே செங்கம் சாலையில் திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் சாலையை மறித்தப்படி கையில் கம்புகள் வைத்து தடுப்புகள் அமைத்து தரையில் காலி குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்