சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-07-07 18:10 GMT
கரூர்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால்  அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் லாலாபேட்டை செம்பொற்ஜோதி ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.  
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்களால் அலங்கார செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
இதேபோல் கழுகூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்