இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-07-16 09:57 GMT
சென்னை,

பழைய மாமல்லபுரம் சாலை 2-வது திட்டத்தை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த தாசில்தாருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்கக் கூடாது. நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம். இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்