கோவை மாவட்டத்தில் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெண் ஒருவர் பலியானார்.

Update: 2021-07-21 19:53 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெண் ஒருவர் பலியானார். நீலகிரியில் 52 பேருக்கு தொற்று உறுதியானது.

பெண் பலி

கோவையில் நேற்று புதிதாக 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. 

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 50 வயது பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 306 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 13 ஆக உயர்ந்து உள்ளது.

 நேற்று 78 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 2 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது 838 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்