கோவில்பட்டி பகுதி தனியார் பள்ளி உடற் கல்வி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

கோவில்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளி உடற் கல்வி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது

Update: 2021-07-22 14:56 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் உடற் கல்வி ஆசிரியர்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட நிரந்தர பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் தொகுப்பு கொடுக்க முடிவெடுத் தனர்.
இதற்கான நிகழ்ச்சி கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஏ.முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஏ.முனியசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பு சு.பால்சாமி ஆகியோர் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் எம்.முனியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் நா.கணேசவேல், மாவட்ட பொருளாளர் ஏ.திருச்செல்வம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.காளிராஜ், சி.ஆனந்தபிரபாகர், வி.ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்