கோவையில் மேலும் 3 கடைகளுக்கு சீல்

கோவையில் மேலும் 3 கடைகளுக்கு சீல்

Update: 2021-07-22 15:23 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி மாளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் மற்றும் எலக்ட்ரிக்கல், துணிக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஹோப் கல்லூரி‌ பகுதியில் நேற்று பேக்கரி, துணிக் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகிய 3 கடைகள் அரசின் கொரோனா தடுப்பு ‌வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக புகார் வந்தது. 

அதன் பேரில் கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் தலைமையில்‌ மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்கள் ஆய்வு செய்து அந்த 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். 

கோவையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 2 கடைகளுக்கு ஏற்கனவே அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்