ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-07-22 17:09 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், கடத்தல்காரர்கள் மூட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடினர். 

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில்
அகதிகள் முகாம் பகுதியில் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அங்கு 14 மூட்டைகளில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் எடை எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆனைமலை குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அதன்பேரில் குடிமைப் பொருள் தனி தாசில்தார் முருகராஜ் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்