பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

நெல்லையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2021-07-22 20:01 GMT
நெல்லை:
பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு முடிவு

கொரோனா பரவலையொட்டி தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இல்லாமல் மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 19-ந்தேதி முடிவு வெளியிடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 20 ஆயிரத்து 918 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். இவர்களில் 11,548 மாணவிகள், 9,370 பேர் மாணவர்கள் ஆவர்.

மதிப்பெண் சான்று

இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கினார்கள். மாணவ-மாணவிகள் நேரடியாகவும் தங்களது சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். இந்த பணியை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.
உயர் கல்வி சேர்க்கை வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழை கொண்டு சேர்ந்து கொள்ளலாம். மேலும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு போன்ற பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்