கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடியில் இருந்து கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-24 16:45 GMT
தூத்துக்குடி, 
தூத்துக்குடியில் இருந்து கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா எண்ணெய்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி படகில் கடத்தி செல்வதற்கு தயாராக இருந்த 26 கிலோ கஞ்சா எண்ணெயை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 2 பேரை கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த வசந்தன் என்ற பிரசாந்த் என்பவர் இதனை கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. 
மேலும் வசந்தன் சென்னையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களுக்கு போதைப்பொருட்களை தம்பதியர் தோற்றத்தில் இருவரை தயார் செய்து அவர்கள் மூலம் கடத்திலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

கைது

இந்த நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வசந்தனை நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வசந்தனை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரை சென்னை மண்டல இயக்குனர் அமித்ஹாவேத், கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்