நாகை மாவட்ட கடலோர போலீஸ் நிலையங்களில் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் திடீர் ஆய்வு

நாகை மாவட்ட கடலோர போலீஸ் நிலையங்களில் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2021-07-27 10:24 GMT
நாகப்பட்டினம், 

கடலோர காவல் குழும கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் நேற்று நாகைக்கு திடீரென வந்தார். தொடர்ந்து அவர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மீனவ மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் மீனவ கிராமங்களில் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். 

இதையடுத்து அவர், கோடியக்கரை கடற்கரை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகை ஆகிய கடலோர போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் கலந்து கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உள்பட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்