பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

Update: 2021-07-27 19:57 GMT
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் நங்கவரம் தெற்கு பகுதி விவசாயிகள் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்கவரம் (தெற்கு) கிராம பகுதியில் கடந்த ஆண்டு நெல் நடவு செய்த பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீடு செய்துள்ளோம். அறுவடை பருவத்தில் பெய்த அடைமழையினால் விளைச்சலுக்கு உண்டான கதிர்கள் சாய்ந்து நெல் அனைத்தும் முளைத்து விட்டன. மேலும் பயிர்கள் அழுகி வீணாகி விட்டதால் அன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் மாவட்ட கலெக்டர் அரசு அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்ததின்பேரில் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் 1 ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் இழப்பீடு ெதாகை இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே, இப்பகுதியில் பிரதமரின் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொைக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தற்போது பம்புசெட் மோட்டாருக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் விவசாய பணிகள் தொடங்கி விட்டபடியால், பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக தொடர்ச்சியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்