நெல்மணிகளால் அப்துல்கலாம் உருவத்தை வடிவமைத்த என்ஜினீயரிங் மாணவர்

நெல்மணிகளால் அப்துல்கலாம் உருவத்தை என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்தார்.

Update: 2021-07-27 20:27 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 20). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர் சாதனை முயற்சிக்காக பிரபலமானவர்களின் உருவங்களை வித்தியாசமான முறையில் வரைவதில் ஆர்வம் கொண்டவர். இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை உதடுகளால் சிவப்பு நிறத்தை பதித்து ஓவியமாகவும், கருணாநிதியின் உருவத்தை குறளோவியம் நூலில் இருந்து 215 வரிகள் 40 ஆயிரம் எழுத்துக்களை கொண்டு கருப்பு, சிகப்பு பேனாவால் நிழல் ஓவியமாகவும் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் நெல் களத்தில் அப்துல்கலாமின் உருவத்தை நெல் மணிகளால் வடிவமைத்தார். இதில் 300 கிலோ நெல்மணிகளை கொண்டு 30 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இடத்தில் அப்துல்கலாமின் உருவத்தை வடிவமைத்து சாதனை படைத்தார். இதனை பார்வையிட்ட அந்த பகுதி பொதுமக்கள், மாணவர் நரசிம்மனை பாராட்டினர்.

மேலும் செய்திகள்