பந்தலூர் அருகே அத்தி குன்னா ஆற்றில் முதலை

பந்தலூர் அருகே அத்தி குன்னா ஆற்றில் முதலை கிடந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2021-07-28 16:38 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே அத்தி குன்னா ஆறு உள்ளது. இங்கு நேற்று மாலை பொதுமக்கள் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரையில் புதர் மறைவில் முதலை ஒன்று படுத்திருந்தது. 

இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தேவாலா வனச்சரகர் கலைவேந்தன், வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், விஜயகுமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்க முயன்றனர். 

ஆனால் முதலை தப்பியோடிவிட்டது. ஆற்று பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் முதலை கிடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்