கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 62 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

Update: 2021-07-28 19:33 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 60 ஆயிரத்து 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 62 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கேரளாவில் இருந்து கீரப்பாளையம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 11 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 556 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 86 பேர் குணமடைந்து வீடுகளுக்‌கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 804 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

3 பேர் பலி

பண்ருட்டியை சேர்ந்த 55 வயது ஆண் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கீரப்பாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், குமராட்சியை சேர்ந்த 71 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 
கொரோனா பாதித்த 712 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 80 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 13 ஆக குறைந்தது.

மேலும் செய்திகள்