மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2021-08-04 16:55 GMT
மணமேல்குடி,ஆக.5-
மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி பிச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65). நேற்று இவர் திருவாப்படியிலிருந்து கட்டுமாவடி நோக்கி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கி யிலிருந்து கட்டுமாவடி நோக்கி கட்டுமாவடியை சேர்ந்த ராமராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்