வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

குன்னத்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-08-06 17:34 GMT
திருப்பூர்
குன்னத்தூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
கத்தியை காட்டி வழிப்பறி
திருப்பூர் மாவட்டம்குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்வயது 52. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 26.3.2019 அன்று தனது மோட்டார் சைக்கிளில் குன்னத்தூரில் இருந்து ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலம் அருகே வந்தபோது லிப்ட் கேட்பது போல் கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்த செந்தில் 51 என்பவர் வழிமறித்துள்ளார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.4300 மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து விட்டு தப்ப முயன்றார். அதற்குள் வரதராஜன் சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து செந்திலை பிடித்து தர்ம அடி கொடுத்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
7 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், வழிப்பறியில் ஈடுபட்ட செந்திலுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்