தரையில் உட்கார்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா

காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-08-16 18:38 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 43 ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென்று தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் சிமெண்டு சாலை, சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பணி ஆணை வழங்க வலியுறுத்தி ேகாஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யன், பாஸ்கரன் ஆகியோர் வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி தலைவர்கள் பணி ஆணை வழங்கினால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என உறுதியாக இருந்தனர். இதற்கிடையே காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைைமயில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி ஆணையை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்கள்.
பல நாட்களாக திட்ட பணிகளுக்கான ஆணையை வழங்காததால் போராட்டம் நடத்தியதாக ஊராட்சி தலைவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்