சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கையில் குழந்தைகள், ெபண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-08-24 17:40 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள குடிசைப் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:-
குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்கள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு சட்ட உதவி தேவைப்படும் பொழுது சட்டப்பணிகள் ஆணைக்குழு அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
 இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்புக்குளோரியா, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் சரளா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்