கண்மாயில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

தேவகோட்டை அருகே கண்மாயில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-25 17:37 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே கண்மாயில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கூலி தொழிலாளி
தேவகோட்டை அருகே உள்ளது சடையன்காடு கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. அவரது மகன் செல்லக்கண்ணு  (வயது47). கூலி தொழிலாளி. இவர் பக்கத்தில் உள்ள மேலசெம்பொன்மாரி பெரிய கண்மாயில் மீன் பிடிப்பதற்காக தனது உறவினர்களுடன் அங்கு சென்றார். அனைவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மதிய நேரம்  மற்றவர்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். 
செல்லக்கண்ணு மட்டும் வீடு திரும்பாமல் தொடர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அந்த கண்மாய்க்கு சென்று தேடியபோது நீரில் செல்லக்கண்ணு உடல் மிதந்து கொண்டிருந்தது. 
விசாரணை
இதுகுறித்து கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து செல்லக்கண்ணு உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்