மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 6 இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-27 12:29 GMT
ராமநாதபுரம், 
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 6 இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கண்டனம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் அரிஹரசுதன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் நிலர் வேணி, மண்டபம் கிளை தலைவர் கோபால், செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி நாததுரை, ராமநாதபுரம் தாலுகா செயலாளர் செல்வ ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணகி ஆகியோர் பேசினர். 
எமனேசுவரத்தில் நகர் செயலாளர் சத்தியமூர்த்தி தலை மையிலும், கமுதியில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலும், ராமேசுவரத்தில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், சிக்கல் பகுதியில் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், முதுகுளத்தூரில் தாலுகா செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது போல் மாத உதவித் தொகையை தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்திலும், மற்ற இடங்களில் தாலுகா அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தாலுகாகுழு உறுப்பினர்கள் அசோக்குமார், லட்சுமணன், ராஜ்குமார், மெர்லின், ஞானமுத்து, வசந்த கோகிலம், கோபால் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்