விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Update: 2021-09-01 16:24 GMT
திருப்பூர், 
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் கூலி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதற்கு திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல துணை ஆணையர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். விசைத்தறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கூலி உயர்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் உதிரி பாகங்கள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு பெற்றுதரக்கோரி பல ஆண்டுகளாக விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன.
இதில் 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயங்கி வருகிறது. மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் உடனடியாக கூலி பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், 2014-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து அனைத்து ரகங்களுக்கும் 60 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொள்ளாததால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அடுத்து நடைபெறுகிற கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுபோல் இந்த கூட்டம் கோவை மண்டல தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்