அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர்

3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2021-09-03 12:03 GMT
திருவண்ணாமலை

3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது. 

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

தொடர்ந்து இன்று முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை  3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 இதனால் கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. 

பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலின் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி ஏற்றி வழிபட்டனர். 

ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று சாமியை வணங்கினர். மேலும் தனித்தனியாக பக்தர்கள்  கிரிவலமும் சென்றனர்.

மேலும் செய்திகள்