ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

Update: 2021-09-04 04:52 GMT
குன்னூர்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் வி.பி.தெருவில் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வலியுறுத்தி பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

அப்போது பண்டைய காலத்தில் முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளான சோளம், கம்பு, கேள்வரகு, சாமை, வரகு, தினை போன்றவற்றை சாப்பிட்டனர். மேலும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை பயன்படுத்தினர். இதனால் அதிக உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். தற்போது கால மாற்றத்தால் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடுவது குறைந்து வருகிறது. 

இதனால் பல்வேறு நோய்கள் எளிதாக நம்மை தாக்குகிறது. எனவே பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பெண்கள் நல அலுவலர் பிரியா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கண்ணன், திட்ட உதவியாளர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்