ரேஷன் கடைகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடைகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு.

Update: 2021-09-05 05:20 GMT
சென்னை,

தமிழகத்தின் அனைத்து கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழகத்தில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்ட மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையின் கண்காணிப்பு நிறுவனம் மூலம் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், ரேஷன் கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விற்பனையாளர் அல்லது கட்டுனராக பணியில் அமர்த்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர்களை பணியமர்த்துவது தொடர்பான அறிவுரைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கியுள்ளார்.

அதன்படி, இரண்டு பேர் பணியாற்றக்கூடிய ரேஷன் கடைகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தலாம். ஒரு நபர் மட்டுமே பணியாற்றக்கூடிய ரேஷன் கடைகளில் அவர்களை பணியமர்த்த கூடாது.

பெண் பணியாளர்களை பொருத்தவரை, ஆண் பணியாளர்களுக்கு இணையாக அவர்களை பணியமர்த்தலாம். ஆனாலும் பெண் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்