மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

Update: 2021-09-08 18:55 GMT
கரூர்,
3-ம் கட்ட கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
இதற்கு ஏராளமான மாணவர்கள், பெற்றோர்களுடன் வந்திருந்தனர். இதில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதையடுத்து, கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

மேலும் செய்திகள்