விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

Update: 2021-09-09 18:21 GMT
வேலூர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதை தடுக்கும் வகையிலும், விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவியும் மார்க்கெட், பஜார் பகுதிகளில் செயின்பறிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. தடையை மீறி பொதுஇடங்களில் வைக்கப்படும் சிலைகளை அப்புறப்படுத்தப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை, வருவாய்துறை, போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மேற்பார்வையில் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்