மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா

மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடந்தது.

Update: 2021-09-11 17:29 GMT
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் பால்குடம் ஊர்வலம், மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. 

மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவில் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 1 மணிக்கு ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமண பெருமாள் மலர் அலங்கரத்துடன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் மஞ்சள் பால் பொங்கலிடுதல் நடந்தது. தொடர்ந்து கோவிலில் ஊர் மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மேல ஆழ்வார்தோப்பு ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்