உள்ளாட்சி தேர்தலின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு

உள்ளாட்சி தேர்தலின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-13 16:41 GMT
புதுச்சேரி, செப்.
உள்ளாட்சி தேர்தலின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரவு 10 மணி வரை...
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.
தற்போது பிரசாரத்தின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக கட்டுப்பாடு விதித்து சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி ஒலி பெருக்கிகளை கிராமப்புற பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை பயன்படுத்த லாம்.
அனுமதி பெற்று...
பிற பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை  மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அதற்கான அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
அனுமதியின்றி வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். வாக்குப்பதிவு முடிவதற்கு 72 மணிநேரத்துக்கு முன்பாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
விதிமுறை மீறல்கள்
ஒலிபெருக்கிகள் ஒலி மாசு மற்றும் பொது அமைதிக்கு தொந்தரவு தரும் என்பதால் விதிமுறை மீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாத அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
மேற்கண்ட உத்தரவினை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்