2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்

2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Update: 2021-09-13 17:41 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக 20-ந் தேதி முதல் 25-ந்் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் ஒரு வயது முதல் 19 வயது உள்ள 1 லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதிலான 23 ஆயிரத்து 242 பெண்களுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 682 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.
முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், மாநில சுகாதார புலனாய்வு மைய இணை இயக்குனர் டாக்டர் சுமதி, மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், உதவி இயக்குனர் டாக்டர் கரோலின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்