பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரதியார் ஆய்வகத்தை காந்திகிராம பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு்ள்ளது.

Update: 2021-09-13 20:44 GMT
திண்டுக்கல் : 

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி ‘பாரதியின் மெய்யியல்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்  பேசுகையில், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் நினைவாக சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி தமிழக அரசு 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடியும் காசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 


காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதியார் ஆய்வகத்தை மேம்படுத்த பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றார். அதன் பின்னர் பாரதியார் ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆனந்தகுமார், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சமயம் மற்றும் மெய் இயல் துறையின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் முத்துமோகன், காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் முத்தையா ஆகியோர் பாரதியாரின் சிறப்பு குறித்து பேசினர்.
முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு,  துணைவேந்தர் (பொறுப்பு) ரங்கநாதன் மாலை அணிவித்து மரியாதை செயதார்.

மேலும் செய்திகள்