திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

Update: 2021-09-15 18:56 GMT
திருத்துறைப்பூண்டி:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பொது பணித்துறை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். 
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார் உத்தரவின்பேரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை,  காசுகடைதெரு, ஜவுளி கடை தெரு, வேதை சாலை என நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு பணி, உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி. பொறியாளர் ரவி, தாசில்தார் அலெக்சாண்டர், நகராட்சி ஆணையர் சந்திரசேகர், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன். உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோரின்  மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்