பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.4.20 லட்சம் தப்பியது

பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.4.20 லட்சம் தப்பியது

Update: 2021-09-20 20:04 GMT
முசிறி, செப்.21&
முசிறியில் இருந்து புலிவலம் செல்லும் சாலையில் தண்டலைபுத்தூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனை மேற்பார்வையாளராக ஆறுமுகம் (வயது 50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு, மது விற்பனையின் மூலம் கிடைத்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 340&ஐ கடையின் உள்ளே உள்ள பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக அவர் வந்தபோது கடையின் முன்பக்க கதவின்(ஷட்டர்) பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை திறந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டகத்தில் இருந்த பணம், மதுபான பாட்டில்கள் ஆகியவை திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பெட்டகத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த அலாரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகளை உடைத்து எடுத்து சென்றதாக தெரிகிறது. பெட்டகத்தை உடைக்க முடியாததால், அதில் இருந்த பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஆறுமுகம் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்