திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Update: 2021-09-21 12:42 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளத்தை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கொரோனா காலகட்டத்தில் மனரீதியாக சோர்வடைந்துள்ள மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தவும் மொழி அறிவை மேம்படுத்தவும் தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இந்த பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் கட்டுரை எழுதுதல் திருவள்ளுவரின் உருவப்படம் வரைதல் கணினி வழியாக திருவள்ளுவரின் சிறப்புகள் அடங்கிய தொகுப்பை உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 9ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாகவும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலமும் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சவுந்திரராஜன் முன்னிலையில் நடத்தப்பட்ட போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் சையது முகமது குலாம் கார்த்திகேயன் ஷாகுல் காளீஸ்வரன் மலர்விழி ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்