கோவில்பட்டியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாறும் பணி தீவிரம்

கோவில்பட்டியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2021-09-22 12:02 GMT
கோவில்பட்டி:
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில்பட்டி நகரிலுள்ள மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி நாளைமறுநாள் வரை நடக்கிறது.
வடிகால்கள் தூர்வாரும் பணி
பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கால் இருக்கும் வகையில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்களை தூர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வர நகராட்சி இயக்குனர் உத்திரவின் பேரில் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்களுடன் 100  தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றநர். முன்னதாக இந்த பணிகளை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் இளங்கோ, உதவி பொறியாளர்கள் பிரதன்பாபு, சரவணண், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன், நகரமைப்பு ஆய்வாளர்கள் செல்வசந்தன சேகர், குமார், வருவாய் ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கிறிஸ்டோபர், உதவிப்பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைமறுநாள் வரை...
 இளையரசனேந்தல் ரோடு, நடராஜபுரம் தெரு, காந்தி நகர், பசும்பொன் நகர் பகுதியில் உள்ள மழை நீர் செல்லும் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, சுத்தப்படுத்த படுகிறது. தொடர்ந்து அனைத்து மழை நீர்வடிகால்களில் உள்ள குப்பைகள், செடிகள் ஆகியவை அகற்றப்பட்டு தூர்வாரப்பட உள்ளது.
நேற்று செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் கிழக்குப் பகுதியில் இருந்து தொடங்கி ஊரணி தெரு வழியாக மெயின் ரோடு மேற்கு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஓடை செல்லும் பகுதியில் தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணிகள் நாளைமறுநாள்(சனிக்கிழமை) வரை நடைபெறும் என்று நகரசபை ஆணையாளர்  தெரிவித்தார்.

மேலும் செய்திகள்