கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவனுக்கு கொரோனா

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-09-22 19:34 GMT
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 20 பேர்கள் வரை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். அதேபோல பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி பரிசோதனைகளுக்கு பிறகு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே சில பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அந்த மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று பரவல் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலையில் அந்த மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்