மணல் கடத்தியவர் கைது

மணப்பாறை அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-28 19:56 GMT
மணப்பாறை, செப்.29-
மணப்பாறை அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்தல்
மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள மான்பூண்டி ஆற்று பகுதியில் மணப்பாறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மணல் அள்ளி டிராக்டரில் கடத்தி வந்த கள்ளிப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (வயது 45) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
*திருவெறும்பூர் பாரதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (40). திருவெறும்பூர் ஐ.டி.ஐ. அருகில் மளிகை கடை நடத்தி வரும் இவரிடம் வடக்கு காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  தமிழ் என்கின்ற தமிழரசன் (37) பொருட்கள் வாங்கி கொண்டு பணம் தரமுடியாது என கூறி கத்தியை காட்டி மிரட்டினாராம். திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*திருச்சி, காஜாமலை, ெரயில்வே பாதுகாப்பு படை குடியிருப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன்  வினோத் (23). இவர் காஜாமலை பகுதியில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடைமுன்பு நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி இ.பி.ரோடு, பாரதியார் தெரு, ரெங்கநாதன் தோப்பை சேர்ந்த ராகவன் மகன் கனகராஜா ( 45). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு சில்வர் தயாரிக்கும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர் நிலைதடுமாறி கீழேவிழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ேநற்று காலை இறந்தார். கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதி மீது தாக்குதல்
*திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் மாதவி வீதியை சேர்ந்தவர் வீராசாமி (70). இவருடைய மனைவி சுமித்ரா தேவி (67). சம்பவத்தன்று இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது இவர்கள் வீட்டின் முன் அதே பகுதியில் வசித்துவரும் செந்தில்குமார் (42) என்பவர் மதுபோதையில் சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை சத்தம் போடாமல் இருக்கும்படி சுமித்ராதேவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சுமித்ராதேவியை தாக்கியதுடன், அவருடைய சேலையை பிடித்து இழுத்து மானபங்க படுத்த முயற்சித்ததாக தெரிகிறது. அத்துடன், இதை தடுக்க வந்த வீராசாமியையும் அவர் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், செந்தில்குமார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
*திருச்சி  மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். 607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்