வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது;

Update:2021-10-03 00:57 IST
மேலூர்
மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில் பாசன கால்வாய் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோடீஸ்வரன்(வயது 24) என்பவரை சிலர் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். காயமடைந்த அவர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் அதே ஊரை சேர்ந்த விஸ்வா(வயது 20), பிரவின்(20), மாணிக்கம்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்