புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-;
சாலை வசதி தேவை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் 4-வது வட்டம் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி தெரு மிக மோசமான நிலையில் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, இங்கு சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-ரபீக், காரைக்குடி.
இருக்கை வசதி வேண்டும்
மதுரை திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லை. இதன் காரணத்தால் இங்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுக்க நிற்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சீதாலட்சுமி, திருநகர்.
மரக்கிளைகளில் உரசும் மின்வயர்
மதுரை காமராஜர் சாலை பகத்சிங் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மின்சார வயர் மரக்கிளைகளில் உரசி செல்கிறது. இதனால் காற்று காலங்களில் தீப்பொறி விழுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-கனகராஜன், மதுரை.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர்.
-குமார், சிவகாசி.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை சிந்தாமணி மெயின் ரோடு ெரயில்வே கேட் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையில் செல்லும் ேபாது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. ேமலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருராஜ், மதுரை.
அடிப்படை வசதி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருமணவயல் ஊராட்சி கீழவயல் கிராமத்தில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கீழவயல்.
பெயர் பலகை
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் வார்டு 62 துளசிராம் தெரு, ராஜீவ் காந்தி தெரு, வைத்தீஸ்வரன் தெரு போன்ற தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. மேலும் மாடர்ன் தெரு போன்ற சில தெருக்களில் பெயர் பலகை அழிந்துவிட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவீந்திரநாத், வில்லாபுரம்.
கொசு தொல்லையால் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தெருக்களில் மழையினால் சாக்கடை தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள தெருக்களில் வசிக்கும் பொதுமக்களிடையே நோய் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொசு பரவுதலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.